மெக்சிகோவில் பஸ்-லாரி மோதி விபத்து ஏற்பட்டதில், 41 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவில் பஸ்-லாரி மோதி விபத்து ஏற்பட்டதில், 41 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு 44 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் பஸ் தீ பற்றியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து, மேயர் ஓவிடியோ பெரால்டா கூறியதாவது: கான்குனில் இருந்து டபாஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த பஸ் விபத்தில் சிக்கியது. இதில், டபாஸ்கோவைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.