இரண்டு பேருந்துகள் மோதல்: நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு (Video)
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250210-WA0005.jpg)
இன்று அதிகாலை தொரட்டியாவ பொலிஸ் பிரிவின் தம்புல்ல குருநாகல் பிரதான வீதியில் தோரயா பகுதியில், கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்து, பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது, அதே திசையில் வேகமாக வந்த மற்றொரு தனியார் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். நால்வரது நிலை மோசமாக உள்ளதாக தெரியவருகிறது.
நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்னால் வந்த பேருந்து அதிக வேகத்தில் வந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
சடலங்கள் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. தொரட்டியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.