யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களிடையே மோதல் – ஒருவர் காயம்.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250210-WA0044.jpg)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் ஏற்பட்ட மாணவர் மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று (09) நடைபெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின்போது, மூன்றாம் வருடத்துக்கும் நான்காம் வருடத்துக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததுடன், அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் உள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.