மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்ப்பாசன செழுமை தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்ப்பாசன செழுமை தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது
நீர்ப்பாசன செழுமை எனும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய குளங்களை அண்டியுள்ள 5000 விவசாய நீர்ப்பாசன தொகுதிகளை மறு சீரமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .
மாவட்ட அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்று கொண்ட அரச அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற முதலாவது அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் மாவட்டத்தில் புனரமைப்பு செய்யப்பட வேண்டிய குளங்கள் , அணைக்கட்டுகள் , கால்வாய்கள் போன்ற மறு சீரமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் 2020- 2022 மாவட்டத்தின் மூன்று வருட திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் , மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் , மாவட்டத்தின் 14 பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்கள் . கலந்து கொண்டனர் .
– Sathasivam Nirojan