மின்சக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும்-தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250211-WA0012.jpg)
மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் மின்சார சபையின் தற்போதைய தலைவர் இருவரும் பதவி விலக வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
மின்சார சபையின் திறமையின்மையால் மின்வெட்டு ஏற்பட்டதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று மின்சார நுகர்வோர் தேசிய சங்கம் கூறுகிறது.
மின்சக்தி அமைச்சர் ஒரு பொறியியலாளராக இருந்தும், அவர் ஒரு குரங்கைப் பிடித்துக்கொண்டு தவிப்பதாக சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தலைவர் மற்றும் அமைச்சர் இருவரும் ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்து பதவி விலக வேண்டும் என்றும், அல்லது பொறியியலாளர்கள் உடனடியாக குரங்கைப் பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
அகில இலங்கை சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார கூறுகையில், குரங்கின் மீது பழியைப் போட்டு மின்வெட்டுப் பிரச்சினையிலிருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது என்றார்.
மின்சார சபையின் திறமையின்மையால் இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக இலங்கை மின்சார சபை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இலங்கை மின்சார பொதுஜன முன்னேற்ற ஊழியர் சங்கத்தின் செயலாளர் உமேத செனவிரத்ன கூறுகையில், மின்வெட்டுக்குப் பின்னால் ஒரு மாஃபியா இயங்குகிறது என்றார்.