நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை திருத்த இன்னும் காலம் ஆகும் ,மின்வெட்டு நீடிக்கும்.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250211-WA0015.jpg)
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் செயற்படுத்த வெள்ளிக்கிழமை வரை ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தற்போது அமுலில் உள்ள மின்வெட்டு அட்டவணை தொடர்ந்து செயற்படுத்தப்படும் அதே வேளையில், போயா விடுமுறை நாட்களில் மின்சார நுகர்வு குறைவாக இருப்பதால் அன்று மின்வெட்டு இருக்காது.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மின்வெட்டு குறித்து எதிர்கால வளர்ச்சிகளின் அடிப்படையில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.