விளையாட்டு பிரதி அமைச்சர் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு .
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இதுவரை இது குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சுகத் திலகரத்ன ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.
நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற சுசந்திகா ஜெயசிங்க, தமயந்தி தர்ஷா ஆகியோரும் தற்போது அவுஸ்திரேலிய குடியுரிமைக்காக அங்கு வசித்து வருகின்றனர்.