பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் .
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/476818640_1210259883803572_1602464478853552362_n.jpg)
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (10) பிற்பகல் துபாயில் உள்ள ஜுமேரா பீச் ஹோட்டலில் மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ராஸ் அல் கைமா ஆட்சியாளரின் மருமகனுமான ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை சந்தித்தார்.
இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.