மட்டக்களப்பில் கொரோன வைரஸ் தொற்றுநீக்கி திரவம் விசுறும் நடவடிக்கை ஆரம்பம்..

தற்போது நாட்டில் கொரோன வைரஸ் பரம்பல் அதிகரித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் பொதுமக்களுக்கான அறிவூட்டல் நிகழ்வுகளும் , கொரோன வைரஸ் தொற்று நீக்கி திரவம் விசுறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 பிராந்திய பொலிஸ் பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன .

அந்த வகையில் கொரோன வைரஸ் தொற்று நீக்கி திரவம் விசுறும் நடவடிக்கை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகர் பகுதிகளில் கொரோன வைரஸ் தொற்று நீக்கி திரவம் விசுறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன . இந்த தொற்றுநீக்கி விசுறும் பணியில் மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எஸ் . ராஜபக்ஸ உட்பட மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் , மக்கள் தொடர்பாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.