பாய்மரக் கப்பலில் உலகை வலம் வரும் கடலூர்ப் பெண்.

கடலூரைச் சேர்ந்த ரூபா என்ற பெண் பாய்மரக் கப்பலில் உலகைச் சுற்றி வரும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

32 வயதான அவர், தற்போது கடற்படையில் பணியாற்றி வருகிறார்.

கடற்படையில் சேர வேண்டும் என்பதுதான் ரூபாவின் சிறு வயது கனவு.

கல்லூரியில் தேசிய மாணவர் படையில் சேர்ந்து (என்சிசி) இதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டவர், கடந்த 2018ஆம் ஆண்டு கடற்படையில் ஆயுதங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர் பதவிக்குத் தேர்வானார்.

முன்னதாக, சென்னையில் பொறியியல் படிப்பையும் முடித்துள்ளார் ரூபா. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ்வி தாரிணி என்ற பாய்மரக் கப்பலில் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்ட முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார் ரூபா.

இவருடன் இந்தச் சாதனைப் பயணத்தில் பங்கேற்ற கேரளாவைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான தில்னாவுக்கும் இந்தப் பெருமை ஒருசேர கிடைத்தது.

இதையடுத்து, தில்னாவுடன் இணைந்து கடல்வழி உலகைச் சுற்றி வரும் சாதனைப் பயணத்திற்கும் தேர்வான ரூபா, கடந்த 2024 அக்டோபர் முதல் தீவிர பயிற்சி மேற்கொண்டார்.

உடல்திறன், மன உறுதி தொடர்பான தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இவரும் தில்னாவும் கோவாவில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் புறப்பட்டு, 38 நாள்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா சென்றடைந்தனர்.

அதன் பின்னர் 24 நாள்கள் கடந்த பின்னர் நியூசிலாந்துக்குச் சென்ற இருவரும் பாக்லாந்த் தீவு தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்ற பின்னர் மே மாதம் மீண்டும் கோவா திரும்புகின்றனர்.

சாதனை மங்கை ரூபாவுக்கு இப்போதே வாழ்த்துகள் குவியத் தொடங்கிவிட்டன.

Leave A Reply

Your email address will not be published.