மிருகங்கள் இந்த அரசாங்கத்தை நடத்த விடவே மாட்டார்கள்…! – சாமர சம்பத் தசநாயக்க
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250211-WA0033.jpg)
தற்போதைய அரசாங்கத்திற்கும் விலங்குகளுக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதாகவும், அரசாங்கத்தை நடத்த விலங்குகள் விடாமல் தடுக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கூறுகிறார்.
“இந்த அரசாங்கத்தை சில மிருகங்கள் நடத்த விட மாட்டாது. மிருகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. இது பழைய பகை என்று நினைக்கிறேன். நேற்று மின்சாரத்துறை அமைச்சர், ஒரு குரங்கு குதித்ததால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றார். இது பெரிய விஷயமாச்சே.”