ஜெர்மனியில் ரயிலும் லாரியும் மோதியதில் ஒருவர் மரணம் , 6 பேருக்குக் கடுமையாகக் காயம்

ஜெர்மனியில் ஹேம்பர்க் (Hamburg) நகரில் ரயிலும் லாரியும் மோதியதில் ஒருவர் மாண்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
25 பேர் காயமுற்றதாகவும் அவர்களில் 6 பேருக்குக் கடுமையாகக் காயம் ஏற்பட்டதாகவும் தீயணைப்புத் துறை குறிப்பிட்டது.
சம்பவம் நேற்று (11 பிப்ரவரி) உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு நடந்ததது.
பிரமேன் (Bremen) நகரை நோக்கி செல்லும் வழியில் தண்டவாளத்தில் உள்ள சாலை சந்திப்பில் விபத்து நிகழ்ந்ததாக Deutsche Bahn ரயில் நிறுவனம் கூறியது.
விபத்துக்குள்ளான ரயிலில் சுமார் 300 பேர் பயணம் செய்தனர் என்று உள்ளூர் நாளிதழ் தெரிவித்தது.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.