நாடு முழுவதும் 139 காவல் நிலைய OICகளுக்கு ஒரே நேரத்தில் அதிரடி இடமாற்றம்!

139 காவல் நிலையத் பொறுப்பாளர்கள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நிலையத் பொறுப்பாளர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 105 பேர் தலைமை பொலிஸ் பரிசோதகர்களாகவும், 34 பேர் பொலிஸ் பரிசோதகர்களாகவும் உள்ளனர்.

இந்த இடமாற்றங்கள் பெப்ரவரி 13 முதல் 18 வரை அமலுக்கு வரும்.

குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்த பல நிலைய பொறுப்பாளர்கள் சாதாரண பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளரின் ஒப்புதலுடன் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.