அர்ஜுனா தாக்கியதில் இருவர் மருத்துவமனையில்

யாழ்ப்பாணம் வலம்புரி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனா தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹோட்டலில் உணவு அருந்தச் சென்றபோது, எம்.பிக்கும் இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.