மாணவர்கள் மேல் கொடூர தாக்குதல் – மாணவிகள் உட்பட 11 பேர் மருத்துவமனையில்!
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250212-WA0017.jpg)
கடுவெல போமிரிய பகுதியில் உள்ள தேசிய பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த சிலர், பாடசாலைக்குள் கெடட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பள்ளி மாணவ மாணவிகளை மிருகத்தனமாக தாக்கியதால், பத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நேற்று (11) பிற்பகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் சில நாட்களுக்கு முன்பும் சில பாடசாலை குழந்தைகளை தாக்கியதாகவும், நேற்றும் மேலும் சிலருடன் வந்து பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறுகிறார்.
பாடசாலையின் அதிபர் கூறுகையில், பழைய மாணவருடன் பாடசாலைக்குள் நுழைந்த வெளியாட்கள் இவ்வாறு மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
சிறுவர்களைத் தாக்கும் போது அவர்களைக் காப்பாற்றச் சென்ற பள்ளி மாணவிகளையும் பூந்தொட்டிகள், விளக்குமாறு, துடைப்பம் போன்ற பொருட்களால் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக நவகமுவ பொலிசில் புகார் அளித்துள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.