கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படலாம்?
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250212-WA0022-1.jpg)
கடந்த அரசாங்கத்தில் உயர்மட்ட அமைச்சர் பதவியை வகித்த அரசியல்வாதி ஒருவர் விரைவில் பொலிஸாரால் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய பணப் பரிவர்த்தனை தொடர்பாகவும், நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் திரும்பப் பெறப்பட்ட வழக்கு தொடர்பாகவும் இக் கைது உள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது அவசரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.