அநுர இன்று உலக அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றுகிறார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெறும் 2025 உலக அரசுகள் உச்சி மாநாட்டில் இன்று (12) பிற்பகல் உரையாற்ற உள்ளார்.

“எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல்” என்ற கருப்பொருளின் கீழ் மாநாடு நேற்று (11) தொடங்கியது.

இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையில், ஜனாதிபதி இன்று மாநாட்டில் கலந்து கொள்ளும் சில அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.