மின்வெட்டை நிறுத்தும் நாளைக் கூற இயலாது – நலிந்த

மின்சாரக் குறைப்பை நிறுத்தும் திகதியை உறுதியாகக் குறிப்பிட முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ கூறுகிறார்.
ஆரம்ப கட்ட விசாரணைகளில், தேசிய மின் அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாகவே இந்த திடீர் மின் தடை ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இனிமேல் அது நடக்காமல் இருக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இன்று போயா தினமாக இருப்பதால் மின்வெட்டு இருக்காது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் மின்வெட்டு தொடர்பாக ஏற்படும் மின் தேவையை பொறுத்து விபரம் அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நுரைச்சோலை மின் நிலையம் மீண்டும் வழமைக்கு வரும் வரை இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.