மன்னார் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் துப்புரவுப் பணி.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250212-WA0036.jpg)
மன்னார் பிரதேச சபை, நகரசபை பேசாலை பிரதேச சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை, பெலகிகோஸ் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு. மன்னார் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினரால். இன்றைய தினம் (12.02) புதன் கிழமை காலை 6.00 மணி தொடக்கம் 11 மணி வரை வங்காலை பறவைகள் சரணாலயத்தை சுற்றிலும் துப்பரவுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதையும், எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நடாத்தப்பட்ட இந்தத் துப்புரவுப் பணியில், வனவிலங்கு ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், தள்ளாடி பாதுகாப்புப் படையினர் மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து துப்பரவுப் பணியினை கொண்டிருந்தனர்.
இதன் போது பறவைகள் சரணாலயத்தைச் சுற்றிலும் காணப்பட்ட பிளாஸ்திக் போத்தல்கள், பொலித்தின் பைகள் மற்றும் பல கழிவுப் பொருட்கள் கிரமமான முறையில் சேகரிக்கப்பட்டு அந்த இடங்களிலிருந்து உரிய முறையில் அகற்றப்பட்டது.