தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும்  மன்னார் மாவட்ட மீனவர் சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கிடையே கலந்துரையாடல்.(Video)

இன்றைய தினம்(112.02) புதன்கிழமை மாலை, மன்னார் தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.இந்த கலந்துரையாடலில் மீனவர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் குறித்து, விவாதிக்கப்பட்டது.

இதன் போது மீனவ சமூக பிரதிநிதிகளின் குறைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் அவற்றிற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூடிய விரைவில் தீர்வினைப் பெற்றுத் தருமென்று தெரிவித்தார்.

இந்நிலையில் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவிருந்த கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவசர நிலமை காரணமாக யாழ்ப்பாணம் திரும்பிச் சென்றதனால், மன்னாரத் தீவு மீனவ சமூகத்தினர் அது குறித்து அதிருப்தி வெளியிட்டனர்.

எவ்வாறாயினும் அவரிடம் கையளிக்கப்படவிருந்த மகஜர்கள் பாரளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.குறித்த கலந்துரையாடலில் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள்,
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஸ்வலிங்கம் கனிஸ்ரன் மற்றும் மீனவ சமூகத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.