கைது செய்யப்பட்டவர் மரணம்- நான்கு பொலிஸார் கைது.

(10.02)ஆம் தகதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வத்துவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஒருவர், பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாணதுறை பொறுப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் கான்ஸ்டபிள்கள், குறித்த நபரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ்  நேற்று(12.02) மாலை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இன்று(13.02) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும், இந்த கான்ஸ்டபிள்கள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக அவர்களின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.