மக்களின் கஷ்டங்களை கேட்க நேரம் ஒதுக்கும் சஜித்.

மக்களின் கஷ்டங்களை கேட்க அரசாங்கத்திற்கு நேரம் இல்லை என்றாலும், எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவிசாவெல்லையில் நடந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது , “இந்த நாட்டில் மக்களை அனாதையாக்கும் அரச கொள்கைகளுக்கு எதிராக எழுந்து, அநீதி, அசௌகரியம் மற்றும் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகுபவர்களின் துன்பங்களுக்கு உதவும் வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இன்று நாட்டில் மக்கள் வாழ முடியாத காலம் நிலவுகிறது. விவசாயிகள் நெல்லை விற்க முடியவில்லை. அதேபோல், மக்கள் தாங்கக்கூடிய விலையில் தேங்காய், அரிசி, உப்பு வாங்க முடியவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியாத அரசாங்கம் மக்களை எப்படி வாழ வைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அரசாங்கத்தில் இருப்பவர்கள் அன்று எதிர்க்கட்சியில் இருந்தபோது நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை தருவதாக கூறினார்கள், ஆனால் அவர்களே வயலுக்குச் சென்று விவசாயிகளைச் சந்திக்க பயப்படுகிறார்கள்.
அரசாங்கத்திற்கு மக்களின் கஷ்டங்களைக் கேட்க நேரம் இல்லை என்றாலும், மக்களின் பிரச்சினைகளுக்காக எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.