நீதிமன்ற உத்தரவை மீறி விகாரைக்கு முன் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட கஜேந்திரகுமாருக்கு அழைப்பாணை!

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு முன் நேற்று முன்தினம் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய குற்றத்திற்காக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வரும் 14-ம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

எம்.பி. தலைமையில் ஒரு குழுவினர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை திஸ்ஸ ராஜமஹா விகாரைக்கு முன் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருந்தது.

தடை உத்தரவில், விகாரைக்கு சொந்தமான கிராம சேவகர் பிரிவுக்குள் எந்த விதமான போராட்டமும் நடத்தக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. அந்த பகுதிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் ஒரு குழுவினருடன் சென்று கருப்புக் கொடிகளை ஏற்றி திஸ்ஸ விகாரைக்கு முன் போராட்டம் நடத்தினார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் பதிலளிக்க எம்.பி. நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.