அரசு நிறுவனங்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க திட்டம்!

அரசு நிறுவனங்களுக்காக மொழிபெயர்ப்பாளர்களின் சிறப்பு குழுவை உருவாக்க தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதேசங்களுக்கு ஏற்ப பேசும் மொழிகள் மாறுபடும் போது அரசு நிறுவனங்களில் இருந்து சேவைகளைப் பெற வரும் மக்கள் சிரமப்படக் கூடாது என்பதே இதன் நோக்கமென பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது அரசு சேவையில் ஈடுபட்டுள்ள நாட்டில் உள்ள பிரதான மொழிகளை நன்கு கையாளும் நபர்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த குழுவை உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்படும்.