பிரான்சில் மதுக்கூடத்தில் கையெறிக் குண்டு வெடித்தது – 12 பேர் காயம்.

பிரான்சின் கிரெனோபள் (Grenoble) நகரிலுள்ள ஒரு மதுக்கூடத்தில் கையெறிக் குண்டு ஒன்று வெடித்ததில் 12 பேர் காயமுற்றனர். அவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.
யாரோ கையெறிக் குண்டை வீசியதால் வெடிப்பு ஏற்பட்டிருப்பதைக் காவல்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.
சம்பவத்துக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.
ஆனால் அது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
1968 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக அங்குக் கட்டப்பட்ட ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகே அந்த மதுக்கூடம் அமைந்துள்ளது.