பொலிஸ் இடமாற்றம் குறித்து பொலிஸ் பிரதி அமைச்சரின் கடுமையான குற்றச்சாட்டு.

சமீபத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மஹரகம பொலிஸ் அதிகாரி ஒருவர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி வடக்கே உள்ள கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
குறித்த கான்ஸ்டபிள் , வேறு தொடர்பு ஒன்றை வைத்திருப்பதாக புலனாய்வு பிரிவினர் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மஹரகம பகுதியில் போதைப்பொருள் ஒழிப்புக்கு இந்த அதிகாரி பெரும் பங்காற்றியதாக அப்பகுதி மக்கள் கூறுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் இதனை பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
“நான் இதை எளிதில் விடமாட்டேன்” என்று பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.