மியன்மாரில் இணைய மோசடி நிலையங்களிலிருந்து 260க்கும் அதிகமானோர் மீட்பு.

மியன்மாரில் உள்ள இணைய மோசடி நிலையங்களிலிருந்து மீட்கப்பட்ட 260க்கும் அதிகமானோர் தாய்லந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தாய்லந்துக்கும் மியன்மாருக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியில் சீன நாட்டவர் இணைய மோசடி நிலையங்களை நடத்திவந்தனர்.

அதில் சட்டவிரோதமாக வேலை செய்யும்படி வெளிநாட்டினர் பலர் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் சிலர் கடத்தப்பட்டனர், சிலர் தாங்களாக முன்வந்து வேலை செய்தனர் என்று அதிகாரிகள் கூறினர்.

மோசடி நிலையங்களிலிருந்து மீட்கப்பட்டோரைச் சோதிக்கும் தாய்லந்து அதிகாரிகள் பின்னர் அவர்களை உரிய நாடுகளுக்கு அனுப்பிவைப்பர்.

தாய்லந்து எல்லையில் உள்ள மோசடி நிலையங்கள் சீனச் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

சீனாவைச் சேர்ந்த பலர் தாய்லந்தை ஆபத்தான இடம் என்று கருதுகின்றனர்.

மோசடிக் கும்பல்களை முறியடிப்பதில் இன்னும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளும்படி ஆசியானிடம் சீனா கேட்டுக்கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.