போதைப்பொருளுக்கு அடிமையாகிய 17 பொலிஸ் அதிகாரிகளது வேலைக்கு ஆப்பு.

போதைப்பொருளுக்கு அடிமையான 17 பொலிஸ் அதிகாரிகள் தற்போது பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் பல பொலிஸ் அதிகாரிகள் போதைப்பொருள் பாவனத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த அதிகாரிகள் அனைவரும் எதிர்காலத்தில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிகாரிகள் அனைவரும் 3 வருட காலத்திற்குள் பொலிஸ் சேவையில் இணைந்த அதிகாரிகள் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகள். மேலும் பலர் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் பாவனத்திற்கு அடிமையாகி இருக்கும் இந்த அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் சேவையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக்க மனத்துங்க தெரிவித்துள்ளார்.