ஹொரணையில் பெரும் தீ விபத்து.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250213-WA0028.jpg)
ஹொரண பொரலுகொட பகுதியில் அமைந்துள்ள இலவங்கப்பட்டை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர், ஆனால் தீ வேகமாக பரவி வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.