மஹிந்தவின் விஜேராம இல்லத்தின் ஒரு பகுதியின் நீர் இணைப்பு துண்டிப்பு.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250213-WA0027.jpg)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் விஜேராம இல்லத்தின் பாதுகாவலர்கள் தங்கியிருக்கும் பகுதியினது நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மூன்று லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தாததால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருக்கும் பகுதியில் நீர் இணைப்பு துண்டிக்கப்படவில்லை.
இந்த இல்லத்தின் நீர் கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தால் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.