மின்சார வெட்டு முடிவுக்கு வந்தது!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததால், இன்று முதல் மின்சார வெட்டு இருக்காது என மின்சார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின்னாக்கிகளும் செயலிழந்தன.