ஜெர்மனியில் போராட்டத்தில் கார் ஒன்று பாய்ந்தமையால் 28 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் முனீச் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் கார் ஒன்று பாய்ந்தமையால் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், உலகத் தலைவர்கள் பலர் அங்கு பங்குபற்றியுள்ளனர்.
குறித்த நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு இந்நிலையில், போராட்டக் களத்திற்குள் வேகமாக உட்புகுந்த கார், மோதியதில் 28 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, காரினை செலுத்திய 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெர்மனி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி ஜெர்மனியின் மாக்டேபர்க் நகரின் கிறிஸ்துமஸ் சந்தை கூட்டத்திற்குள் வேகமாக நுழைந்த காரில் மோதியதில் 5 பேர் உயிரிழந்ததோடு 200 பேர் வரை காயமடைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.