NPP எம்.பி.க்கள் 15 பேர் அரசாங்கத்திலிருந்து விலகத் தயாராகிறார்களா?

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகத் தயாராக இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியதாக , ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக அருண பத்திரிகையின் அரசியல் பத்தி கூறுகிறது.
அதில் உள்ள செய்தி முழுவதுமாக பின்வருமாறு:
தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவருடன் அரசாங்க உறுப்பினர்கள் சிலர் மிகவும் நெருங்கிய உறவைப் பேணி வருகின்றனர். இருவரும் அடிக்கடி செய்திகளைப் பேசிக் கொள்கிறார்கள், மேலும் நலம் விசாரிபது முதல் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நண்பர்களாக உள்ளனர்.
அரசாங்க நண்பர்கள் SJB நண்பரிடம் அடிக்கடி ஒரு கவலையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
“எங்களுக்கு சம்பளம் இல்லை. குறைந்தபட்சம் கொடுப்பனவு கூட கிடைக்கவில்லை. நாங்கள் எப்படி இப்படி வாழ்வது. பாராளுமன்றம் முடிந்ததும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்று எம்.பி. வீடுகளில் இறக்கி விடுகிறார்கள். மறுநாள் காலையில் மீண்டும் பஸ் வந்து எங்களை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறது. அதைத் தவிர எங்களுக்கு வேறு வாழ்க்கை இல்லை” என்று கூறிய NPP எம்.பி.க்கள், தாங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் அடிமைகளாக வேலை செய்ய வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இதனால் எதிர்காலத்தில் சுமார் பத்து, பதினைந்து அரசாங்க எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும் இவர்கள் SJB நண்பரிடம் கூறியுள்ளனர்.