USAID நிதி யார் , யாருக்கு வழங்கப்பட்டது என்பதை கண்டறிய குழு அமைத்துள்ளதாக நாமல் ஜூலி சாங்கிடம் தெரிவிப்பு

USAID மூலம் யாருக்கெல்லாம் நிதி உதவி வழங்கப்பட்டது, எந்த அமைப்புகளுக்கு என்பது குறித்து ஆராய்வதற்காக தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு சபாநாயகரிடம் தான் கடிதம் கொடுத்ததாகவும், உடனடியாக இந்த தெரிவுக்குழுவை நியமித்து USAID மூலம் யாருக்கு உதவி வழங்கப்பட்டது என்பதை பார்க்க முடியும் என , இன்று தாமரை வீதியில் உள்ள பொஹொட்டு அலுவலகத்துக்கு , ஜூலி சங் வந்து மொட்டு கட்சியினரை சந்தித்த போது நாமல் ராஜபக்ஷ , அமெரிக்க தூதர் ஜூலி சங்கிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கு பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் மிகவும் சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தேசிய அழைப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க மற்றும் முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சி.பி. ரத்நாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகியோர் கலந்து கொண்டனர்.