பிக்பாஸ் சீசன் 4 பாலாஜி, நடித்துள்ள ‘பயர்’ படம் எப்படி! விமர்சனம்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் பாலாஜி, அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கத்தில் ‘பயர்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளார். 2020-ம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிசியோதெரபி மருத்துவர் பாலாஜி முருகதாஸுடன் நான்கு பெண்கள் நெருங்கி பழகுகின்றனர். திடீரென்று பாலாஜி முருகதாஸ் காணாமல் போகிறார். அவரை போலீசார் தேடுகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் அவர் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வருகிறது. பின்னர் அவர் மாயமானதன் பின்னணி என்ன? நான்கு பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? என்பதே மீதி கதை.
திகிலோடு தொடங்கி கடைசி வரை விறுவிறுப்பை படம் தக்க வைத்துள்ளது. பாலாஜி முருகதாஸ் முதல் பாதியில் சாந்தமாகவும் பிற்பகுதியில் குரூர முகம் காட்டியும் அதிர வைக்கிறார். பிசியோதெரபி சிகிச்சை மூலம் பெண்களை வசப்படுத்தும் காட்சிகள் அதிர வைக்கிறது.
ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அமைதியாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மிகையான ஆபாசம் பலவீனமாக இருந்தாலும் சொல்ல வந்த கதைக்கு அழுத்தம் கொடுக்க அவை பயன்பட்டு இருப்பது சிறப்பு.
சாக்ஷி அகர்வால் அழகும் கவர்ச்சியுமாய் கதாபாத்திரத்துக்கு வலுசேர்த்துள்ளார். ரச்சிதா மகாலட்சுமி கடன் கொடுத்தவனிடம் சிக்கி படும் அவஸ்தையை நேர்த்தியாக முகத்தில் கடத்தி உள்ளார். அரைகுறை உடையில் படுக்கை அறையில் அத்துமீறும் காட்சி உச்சம்.
நல்லவர் போல் பழகும் காமுகர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சமூக பொறுப்போடு விழிப்புணர்வுவை படம் தருகின்றது.