ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்.

2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இந்நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
அதற்கமைய
மாத்தளை – ரோஹினி குமாரி விஜயரத்ன கவிரத்ன
அநுராதபுரம் – ரோஹன பண்டார
புத்தளம் – ஹெக்டர் அப்புஹாமி
காலி – கயந்த கருணாதிலக்க
கம்பஹா – ஹர்ஷன ராஜகருணா
குருணாகல் – நளின் பண்டார
களுத்தறை – அஜித் பி பெரேரா
இதேவேளை, கொழும்பு மாவட்ட தலைவராக பதவி வகித்த ஹர்ஷ டி சில்வாவிற்கு அப்பதவி மீண்டும் வழங்கப்படவில்லை என்பதோடு, குறித்த பதவியை கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாஸ தன் வசம் வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஏனைய மாவட்டங்களுக்கான அடுத்த தொகுதி நியமனங்கள் எதிர்வரும் நாட்களில் வழங்கி வைக்கப்படவுள்ளதாக, கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் பிரசன்னமாகி இருந்தார்.