யாழ், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் விபத்தில் படுகாயம் .

நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்றையதினம் (15) மாலை சம்பவித்துள்ளது.

கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.