ஜப்பானிய வங்கிகள் இலங்கையின் கடன் பத்திரங்களை ஏற்க மறுப்பதால் வாகன இறக்குமதியில் சிக்கல்

இலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், ஜப்பானில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பானிய வங்கிகள் இலங்கையின் வங்கிகளின் கடன் பத்திரங்களை நிராகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிங்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், வாகன இறக்குமதி நிறுவனங்களும், தனிப்பட்ட இறக்குமதியாளர்களின் நம்பிக்கையும், அவர்களின் திறனையும் பொறுத்தே வாகனங்களை கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையை தவிர்க்க வங்கிகள் மூலம் வேறு வழிமுறை இருந்தாலும், அதனால் வாகனங்களுக்கு கூடுதல் பணம் செலவாகி, வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.