முன்னாள் எம்.பிக்களுக்கு அரசாங்கத்தால் ஏற்படும் அநீதிகள் குறித்து ரணில் – மைத்திரி சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்களும் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, பிவிதுரு ஹெல உறுமையவின் தலைவர் உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, ஷெஹான் சேமசிங்க, நிமல் லன்சா, நிமல் சிறிபால டி சில்வா, பிரேம்நாத் சீ தொலவத்த மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தற்போதைய அரசாங்கத்தால் முன்னாள் எம்.பிக்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து தலைவர்கள் கலந்துரையாடியதாக அனுர பிரியதர்ஷன யாப்பா கூறியதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. வேறு எந்த அரசியல் கூட்டணியையும் உருவாக்க கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த எதிர்க்கட்சி தலைவர்களின் இரண்டாவது சந்திப்பு இது. முதலாவது ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்றது.