அதானி வெளியேறிய பின், டில்வின், மின்சார அமைச்சர் இந்திய தூதரை சந்திப்பு… எரிசக்தி பற்றி பேச்சுவார்த்தை தொடர்கிறது..
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250216-WA0011.jpg)
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிற்கும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான கலந்துரையாடல்கள் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றன.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரப்பூர்வ X கணக்கில், இந்தியா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்த விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியும் இந்திய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து இரு தரப்பினருக்கும் இடையிலான எரிசக்தி கூட்டாண்மை குறித்து விவாதித்ததாக X கணக்கு கூறுகிறது.
இந்தியாவின் அதானி குழுமம் நாட்டின் எரிசக்தித் துறை முதலீட்டிலிருந்து விலகியதன் பின்னணியில் இந்த விவாதங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.