Parking Tickets மோசடி குறித்து நாட்டுக்கு அறிவிப்பு – முதல் 10 நிமிடங்கள் இலவசம்.

வாகனத்தை நிறுத்தியவுடன் கட்டணம் செலுத்த வேண்டும் (Parking Tickets) என்று எந்த சட்டமும் இயற்றப்படவில்லை என கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பொது பார்க்கிங் இடங்களை பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு, வாகனம் நிறுத்தப்பட்ட நேரத்தைக் கண்காணித்தே ரசீது வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, வாகனம் நிறுத்தப்பட்ட பிறகு முதல் 10 நிமிடங்கள் இலவசம் என்றும், 10 நிமிடங்களுக்கு மேல் பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்தும் சந்தர்ப்பங்களில் மட்டுமே 70 ரூபாய் கட்டணம் வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்தியவுடன் கட்டணம் வசூலிக்க எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என்று கொழும்பு மாநகர சபையின் பிரதிநிதி வலியுறுத்தினார்.

மேலும், போயா தினங்கள் மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் பொது பார்க்கிங் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று கொழும்பு மாநகர சபை மேலும் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.