தகவல் கொடுத்தால் பொலிஸாரிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் !

வெல்லவ, மாரலுவாவ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைப் பற்றிய தகவலை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் பரிசுத் தொகையை வழங்க பொலிஸ் தீர்மானித்துள்ளது.
தகவல் வழங்குபவர்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்க பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய பரிசுத் தொகையை பொலிஸ் பரிசு நிதியிலிருந்து வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தீர்மானித்துள்ளார்.
வெல்லவ பொலிஸ் பிரிவின் வாசல எப்பாட்மென்ட், மாரலுவாவ முகவரியில் வசித்து வந்த ஒருவர் 2024 டிசம்பர் 24 ஆம் திகதி இரவு டி56 துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்காக வெல்லவ பொலிஸாரும் குருநாகல் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவும் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றம் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்குமாறு பொலிஸ் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொலைபேசி எண்கள்
071 – 8591244 – பிரிவு பொறுப்பதிகாரி, குருநாகல்
071 – 8591882 – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்