சர்வதேச பொலிஸாரை சிக்கலில் தள்ளிய மதூஷ் கொலை!

மாகந்துரே மதூஷின் கொலையுடன் இலங்கைக்கும் சர்வதேச பொலிஸாருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதூஷ் சர்வதேச பொலிஸ் பிடிவிறாந்தின் அடிப்படையில் டுபாய் அரசாங்கத்தால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

டுபாயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷை இலங்கைக்கு நாடு கடத்துமாறும் அவர் தொடர்பான தகவல்களை வழங்கவும் இலங்கை பொலிஸ் உயரதிகாரிகள், சட்டத்துறை அதிகாரிகள் சிலர் டுபாய் சென்று கோரிக்கை முன்வைத்தனர்.

எனினும் தன்னை நாடு கடத்த வேண்டாம் எனவும் இலங்கையில் தனக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் தான் கொலை செய்யப்படுவது உறுதி எனவும் மாகந்துரே மதூஷ் டுபாய் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் அந்த கோரிக்கையை மறுத்த டுபாய் அதிகாரிகள் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் மதூஷ் கொலை செய்யப்பட்டதால் அவரை கைது செய்த டுபாய் அசாங்கமும் நாடு கடத்த தலையிட்ட சர்வதேச பொலிஸாரும் சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனால் எதிர்வரும் காலங்களில் டுபாய் உள்ளிட்ட ஏனைய நாடுகளில் உள்ள முக்கிய சந்தேகநபர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது மிகவும் சவாலான விடயம் எனவும் சர்வதேச பொலிஸாரின் பிடிவிறாந்தில் உள்ளவர்கள் விடுவிக்கப்படவும் புதிதாக எவரையும் பிடிவிறாந்தில் இணைத்துக் கொள்ளவும் வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

VK

 

Leave A Reply

Your email address will not be published.