முகநூல் பதிவுக்காக ஜே.வி.பியின் பழைய முறையில் வீட்டிற்கே ஆட்களை அனுப்பி வழக்கு விசாரணையா ? – NPP மீது ரோஹினி கவிரத்ன குற்றசாட்டு (Video)

மாத்தளை யட்டவத்த பிரதேசத்தில் வசிக்கும் அமல் அத்தநாயக்க என்பவரது வீட்டிற்கு வந்த ஜே.வி.பி. (மக்கள் விடுதலை முன்னணி) உறுப்பினர்கள் குழு அவரை 22 நிமிடங்கள் மிரட்டி குற்றம் சாட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கூறுகிறார்.
யட்டவத்த பிரதேச சபையின் ஜே.வி.பி. முன்னாள் உறுப்பினர் டபிள்யூ.ஜி. மஞ்சுல பிரசாத் சமரவீர மற்றும் சமீபத்தில் திசைகாட்டியில் இணைந்த விஜேரத்ன ஆகியோர் முகநூலில் பதிவிட்ட பதிவு தொடர்பாகவே இவ்வாறு மிரட்டலில் ஈடுபட்டதாக அவர் கூறுகிறார்.
கிராமத்தில் வீடுகளுக்கே சென்று வழக்கு விசாரணை செய்யும் மாத்தளையின் பழைய முறையை தோற்கடிக்க நாட்டின் அனைத்து முற்போக்கு சக்திகளும் சுதந்திர குடிமக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் சமூக ஊடகங்கள் மூலம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
வெறுப்பு மற்றும் கோபத்தை பரப்புவதன் மூலம் ஆட்சிக்கு வந்த இவர்கள் இப்போது எதிர்க்கட்சிகளின் நண்பர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ சமூக ஊடகங்கள் மூலம் ‘பழைய வாக்குறுதிகளை நினைவூட்ட’ கூட இடம் கொடுக்காமல் செயல்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார் .