அனைத்து இராணுவ வீரர்களின் கடவுச்சீட்டுகளும் இராணுவத்தின் வசம்!

இராணுவ மேஜர் பதவிக்குக் கீழேயுள்ள அனைத்து வீரர்களின் வெளிநாட்டு பயண கடவுச்சீட்டுகளும் ரெஜிமென்ட் மையங்களில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு பயண கடவுச்சீட்டுகள் ரெஜிமென்ட் மையங்களின் மைய கட்டளை அதிகாரிகளின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியின் பேரில், வீரர்கள் எந்த நேரத்திலும் அந்த வெளிநாட்டு பயண கடவுச்சீட்டுகளை மீண்டும் பெற முடியும்.
இராணுவ வீரர்களின் அமைதி காக்கும் பணிகள் மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் திட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது.