36 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹஷீஷுடன் , கனடா பெண் விமான நிலையத்தில் கைது!

சுமார் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள “ஹஷீஷ்” போதைப்பொருளுடன் கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதான இந்த பெண் நேற்று இரவு கனடாவின் டொரொன்டோவிலிருந்து வந்தபோது, சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை சுங்கத்திற்கு கிடைத்த சர்வதேச உளவுத் தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் புலனாய்வு பிரிவினர் கூறுகின்றனர்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பைகளில் இருந்த சில படுக்கை விரிப்புகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36.5 கிலோகிராம் “ஹஷீஷ்” சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த போதைப்பொருள் வேறு நாட்டிற்கு மறு ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.