முன்னாள் ஜனாதிபதி ரணில் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஓமானில் நடைபெற்று வரும் 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது இது நடந்தது.
அங்கு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்தும் அங்கு கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது X (ட்விட்டர்) கணக்கில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை “சந்திப்பது மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.