திருமண ஊர்வலத்தின் போது உயிரிழந்த மணமகன்.

26 வயதான மணமகன் , தனது திருமண நாளன்றே திடீரென உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது.(Video)
திருமண ஊர்வலத்தின் போது அவர் குதிரையின் மீதிருந்து சரிந்ததாக கூறப்படுகிறது.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பாரம்பரிய உடையில் அலங்கரிக்கப்பட்ட அந்த இந்திய மணமகன் குதிரையின் மீது இருந்து தடுமாறி கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.