ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவு.

2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், வரவு செலவுத் திட்ட முன்வைப்பிற்காக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன் வைத்தார்.
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15,750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கழிவு முகாமைத்துவ வசதிகளுக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கிராமிய வீதி அபிவிருத்திக்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும். நிவாரண பொதி வழங்கப்படும். இதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
சிறுவர் மற்றும் இளைஞர் உளவியல் பிரச்சினையானது சமூக பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு தீர்வுகாணும் திட்டங்களை நடைமுறைப்படுத்த 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சிறைச்சாலையில் இருந்து வெளியேறும் சிறுவர்களின் நலன் கருதி விசேட திட்டங்கள்.
சிறைச்சாலை, சிறுவர் நன்னடத்தை மத்திய நிலையங்களில் உள்ள சிறுவர்களின் நலன்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
அஸ்வெசும நலன்புரித்திட்டத்தில் புதிதாக 2,80000 பயனாளர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பு.
அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்துக்காக 232.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வடக்கு மாகாணத்தில் தெங்கு பயிர்ச்செய்கைக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ. 250,000 லிருந்து ரூ. 1 மில்லியனாக உயர்த்தப்படும்.
இளைஞர்களிடையே தற்கொலைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை சேவைகளை விரிவுபடுத்துவதற்காக நடுத்தர கால திட்டத்தை செயல்படுத்த ரூ. 250 மில்லியன் ஒதுக்கப்படும்.
பாடசாலை கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்து புதிய நிலையை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பாலர் பாடசாலை மாணவர்களுக்காக காலை உணவுக்கான வேலைத்திட்டத்துக்கான ஒதுக்கீடு 60 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிப்பு – 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பல்கலைக்கழக கட்டமைப்பு அபிவிருத்திக்காக 135 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்கான கொடுப்பனவு ரூ.3,000 லிருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்படும்.
சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்திர கொடுப்பனவு ரூ.7,500 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
புலமைபரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான மாணவர் உதவி தொகை 750 ரூபாவிலிருந்து 1500 ரூபாவாக அதிகரிப்பு- 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்க 7,500 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதாக ஜனாதிபதி கூறுகிறார்.
ஆட்டிசம் உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனையில் (LRH) ஒரு பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையத்தை நிறுவ 200 மில்லியன் ரூபாயை ஒதுக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக அரசாங்கம் 185 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பின் மேம்பாட்டிற்காக 135 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகிறார்.
மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தற்போதுள்ள 5000 ரூபாயிலிருந்து 7500 ரூபாயாக உயர்த்தப்படும்
யாழ்ப்பாணத்தில் தீக்கிரையாக்கப்பட்ட பொதுநூலகத்தினை நவீன மயப்படுத்த 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Disanayaka) தெரிவித்துள்ளார்.
பாடசாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறுகிறார்.
2025 ஆம் ஆண்டில் சுகாதாரத் துறைக்கு ரூ. 604 பில்லியன் ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய காப்புறுதி இரண்டரை இலட்சம் ரூபாவால் குறைப்பு.
இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார், ஏனெனில் இந்த நோக்கத்திற்காக பணம் ஒதுக்கப்படவில்லை.
இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அவர் மேலும் கூறினார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான அனைத்து சொகுசு வாகனங்களும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஏலம் விடப்படும் என்று ஜனாதிபதி கூறுகிறார்.
தற்போதுள்ள அரசு வங்கி முறையின் கீழ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) நலனுக்காக ஒரு மாநில மேம்பாட்டு வங்கி நிறுவப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார்.
இலங்கையில் புதிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி கூறுகிறார்.
அனுராதபுரம் மற்றும் யபஹுவ போன்ற சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும், இந்த இடங்கள் முக்கிய கலாசார மற்றும் வரலாற்று தலங்களாக முத்திரை குத்தப்பட்டு சந்தைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சுற்றுலா தலங்களுக்கு டிஜிட்டல் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கான ஒப்புதல்களுடன் ‘அனைத்து சேவைகளும் ஒரே இடத்திலிருந்து’ என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது.
வங்குரோத்து நிலை குறித்த சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான வசதியை மேம்படுத்துவோம்.
அரசுக்குச் சொந்தமான நிலங்கள் உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு விடப்படும்.
பொருளாதார சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை.
முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதிகளை வழங்குதல் பசுமை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த நடவடிக்கை.
தேசிய தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா ஒடுக்கீடு.
கொழும்பு துறைமுகத்தின் வடக்கு – மேற்கு முனைய அபிவிருத்திகளுக்காக ஒரு மாதத்துக்குள் யோசைனைகள் கோரப்படும்.
பல்நோக்கு பொருள் விநியோக மத்திய நிலையமாக வெயாங்கொடையில் உள்ளக கொள்கலன் முனையம் நிர்மானிக்கப்படும்.
துறைமுக அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கொழும்பு துறைமுகம் – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உயர்தர ஸ்கேன் கட்டமைப்பை உருவாக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
அத்தியாவசிய துறைகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு. மீண்டெழும் செலவுகளுக்கு 4% நிதி ஒதுக்கீடு.
பொருள் மற்றும் சேவை நியாயமான விலைக்கு தடையின்றி விநியோகிக்கப்படும்.
கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு.
பொருள் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதி ஊடாக 19 பில்லியன் டொலர் வருவாயை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு.
ஏழ்மையை இல்லாதொழிப்பதற்கு உரிய திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
அஸ்வெசும மற்றும் ஏனைய நலன்புரி சேவைகளுக்காக ஜூலை மாதம் முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குள் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறுகிறார்.
எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த வருடத்தில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்த ஜனாதிபதி, 2025 வரவுசெலவுத் திட்டத்தில் பொதுமக்கள் தொடர்பான நிதி ஒதுக்கீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பொது நிதி பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என அறிவித்தார்.
கடன் மறுசீரமைப்பைப் பொறுத்தவரை, 570 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்திய பிறகும், 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அரசாங்கத்தால் அந்நிய செலாவணி கையிருப்பை 6.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பராமரிக்க முடிந்தது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டமாக இது பார்க்கப்படும் நிலையில், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, பொதுமக்களுக்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் பாரிய எதிர்பார்ப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.