தில்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

தலைநகர் தில்லியில் திங்கள்கிழமை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
தில்லி-என்சிஆர் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம் அல்லது காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கம், புது தில்லியை மையமாகக் கொண்டு, காலை 5:36 மணிக்கு ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்புக் கல்விக் கல்லூரிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தாக அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார். நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலத்த சத்தமும் கேட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
அருகில் ஏரியைக் கொண்ட அந்தப் பகுதி, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறிய, குறைந்த அளவிலான நிலநடுக்கங்களை அனுபவித்து வருகிறது.
பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கூட அனுமதி சீட்டு இன்று வெளியீடு
முன்னதாக இங்கு 2015-இல் ரிக்டர் அளவில் 3.3ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது என்றார். நிலநடுக்கத்தால் தில்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் உயரமான கட்டடங்களில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேறினர்.